தொடர்புடைய செய்திகள்
- “இப்போ எங்களுடைய இலக்கு இதுதான்… அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்” – மைக் ஹஸ்ஸி கருத்து!
- சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!
- ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!
- சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!
- எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!
ரசிகர்களுக்கு ஆறுதல் வெற்றியையாவதுக் கொடுக்குமா தோனி & கோ?.. இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்!
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில மாறுதல்களை செய்த போதும் பேட்டிங்கில் அது எந்த வகையிலும் பலனளிக்கவில்லை. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த சீசனில் சென்னை அணித் தங்கள் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ஐந்து முறைத் தோற்றுள்ளது. இதுவரை எந்தவொரு சீசனிலும் இப்படி அதிகபட்சத் தோல்விகளை சந்தித்ததில்லை. இது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்தப் போட்டிகளுக்கான டிக்கெட்கள் விற்பனையில் அது பிரதிபலிக்கிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. வழக்கமாக பஞ்சாப் அணி சென்னை அணிக்கு எதிராகத் தொடர்ந்து தோல்விகளையேப் பெற்று வந்துள்ளது. ஆனால் இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. இன்றையப் போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது சென்னை அணி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.