வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 20 மே 2024 (07:54 IST)

இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

நடந்துவரும் ஐபிஎல் சீசனில் சி எஸ் கே அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் கடைசி கட்டத்தில் சொதப்பி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. சி எஸ் கே அணியைப் பொறுத்தவரை ரசிகர்கள் தோனி பேட்டிங் செய்வதைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் அளவுக்கு சி எஸ் கே வெற்றிக்கு ஆர்வமாக இருக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

இதுபற்றி பலரும் பல கருத்துகளை விமர்சனமாக வைத்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் நக்கலாக ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் “தோனி ஓய்வை அறிவித்துவிட்டால் சி எஸ் கே அணிக்கான ரசிகர்கள் குறைந்துவிடுவார்கள். அவர்கள் மற்ற மைதானங்களில் நடக்கும் சி எஸ் கே போட்டிக்கு வரமாட்டார்கள்.

தோனிக்கு இப்போது 42 வயதாகிறது. இன்னும் ஒரு சீசனில் அவரால் விளையாட முடியாது. அடுத்த சீசனில் அவர் விளையாடினால், விரலில் ஒரு சிறு காயம் இருந்தால் கூட அவரின் வயது காரணமாக அது முகத்தில் தெரிந்துவிடும்.” எனக் கூறியுள்ளார்.