1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin chat with jahnvi kapoor fake id

ஜான்வி கபூரின் ஃபேக் ஐடியோடு சாட் செய்த அஸ்வின்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

Ravindra Jadeja
இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு மிக முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. சமீபத்தில் அவர் தனது 500 ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8 ஆவது பவுலராகவும், இந்திய அளவில் இரண்டாவது பவுலராகவும் இந்த சாதனையைப் படைத்தார்.

இதையடுத்து தரம்சாலாவில் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது ஒரு மதிப்புமிக்க மைல்கல் ஆகும். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் 9 விக்கெட்களை வீழ்த்தி 128 ரன்கள் சேர்த்தார்.

இதுகுறித்து ஜடேஜா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் “நான் ரவீந்திரன்.. நீ ரவிச்சந்திரன்! மீசை வெச்சா இந்திரன், மீசை வெக்கலைனா சந்திரன். அஸ்வின் அண்ணா.. நீங்கள் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்துள்ளதற்கு வாழ்த்துகள். நீங்கள் சொன்ன ஐடியாக்களை பின்பற்றி நானும் சில விக்கெட்டுகளை வீழ்த்தினேன். நீங்கள் இன்னும் பல போட்டிகளில் பல விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்” என கூறியுள்ளார். வீடியோவின் இறுதியில் ’நல்லாருக்க ஆஷ்.. ரொம்ப நல்லாருக்க..” என்று உற்சாகமாக பேசியிருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்த அஸ்வின் தன்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை என்று கூறியிருந்தார்.

அந்த ட்வீட்டில் ஜான்வி கபூர் பெயரில் சில கமெண்ட்கள் வந்து விழுந்தன. அதை உண்மை என நம்பி அஸ்வின் அவரோடு உரையாடினார். ஒரு கட்டத்தில் அந்த நபரே ‘நான் ஃபேஜ் ஐடி’ எனக் கூற அவருக்கு அஸ்வின் “அதை நீங்கள் சொல்ல தேவையில்லை. உங்கள் ஐடியில் உள்ள பேரடி என்பதே அதை சொல்கிறது. ” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
அமித்ஷாவை கிண்டலடித்தாரா அஸ்வின்.. எக்ஸ் தள உரையாடல் வைரல்..!