ஆதார் குறித்த தகவல் 10 அடி உயரம் கொண்ட அறைக்குள் பாதுகாப்பாக இருக்கிறது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ள விவகாரம் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் திட்டத்தில் பொதுமக்களின் கைரேகைகள், கண்விழிகள் ஆகியவை எடுக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தாலும் மத்திய அரசு அதை கண்டு கொள்ளவில்லை. வங்கி கணக்கு, கேஸ் இணைப்பு, அரசு சலுகைகள் என அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவிக்க பல கோடி பேர் இதுவரை ஆதார் அட்டையை எடுத்துவிட்டனர்.
அந்நிலையில், ஆதார் அட்டையில் உள்ள பொதுமக்களின் தகவல்கள் திருடப்படுவதாக ஏற்கனவே புகார் எழுந்தது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து அதை மறுத்து வருகிறது.
இந்நிலையில், ஆதார் தகவல்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சுவர் 10 அடர்த்தி கொண்டதால் தகவல்கள் மிக பாதுகாப்பாக இருக்கும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்தார். அவர் அப்படி பேசியிருப்பது கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.