டெல்லிக்கு நடந்தே செல்வேன்: சரத்குமார் அதிரடி அறிவிப்பு

Last Modified வெள்ளி, 23 மார்ச் 2018 (20:39 IST)
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்தமாக மத்திய அரசை நோக்கி குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு கர்நாடகாவில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக இந்த விஷயத்தில் சுணக்கம் காட்டி வருகிறது

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பத்து மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியும் வருகின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது பங்கிற்கு ஒரு அதிரடி அறிவிப்பை அறித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு நடந்தே செல்லும் போராட்டத்தை தொடங்குவேன் என்று கூறியுள்ளார். சரத்குமாரின் இந்த அறிவிப்பு குறித்து நெட்டிசன்கள் வரவேற்பையும் கிண்டலையும் மாறி மாறி பதிவு செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :