வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By VM
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (11:00 IST)

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் இம்ரான் தஹீர்

தென் ஆப்பிரிக்க அணி வீரர் இம்ரான் தஹீர், பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்தவர். சொந்த நாட்டில் வாய்ப்பு கிடைக்காத தஹீர், தென்னாப்பிரிக்காவில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் வீரராகக் களமிறங்கினார். அதன்படி கடந்த 2011 -ம் ஆண்டு, தனது 30 வயதை கடந்த பின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 


 
இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளும், 95 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளும், 37 டி20 போட்டிகளில் 62 விக்கெட்டுகளும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
 
சிறந்த சுழற்பந்து வீச்சாளரான தஹீர் பந்து வீச்சில் வீழாதவர்களே இல்லை. மேட்ச் வின்னர் நாயகனாக  பல போட்டிகளில் திகழ்ந்தார். 
தற்போது, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடிவருகிறார்.
 
வரும் உலகக்கோப்பை தொடருக்குப் பின், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.    
எனக்கும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டுக்கும் நல்ல புரிதல் உள்ளது. இப்போது உலகக்கோப்பை ஆட்டங்களுக்குப் பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வுபெறப் போகிறேன். 
நான் எப்போதும் தென்னாப்பிரிக்க அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடுவதை விரும்புகிறேன். ஏனென்றால், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடக்கூடிய அளவுக்கு உடற்தகுதி ஒத்துழைக்கிறது. 2020 டி20 உலகக்கோப்பை வரை விளையாட முடியும் என நம்புகிறேன். இதற்கு வாய்ப்பு கொடுத்த கிரிக்கெட் போர்டுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் விளையாட விரும்புகிறேன் என்றார்.