1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Chetan Sharma may continue as selection committee president

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மீண்டும் சேத்தன் சர்மா?

சேத்தன் சர்மா
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு முழுவதும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு சேத்தன் சர்மா தலைமை வகித்து வந்தார். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இவர்கள் மேல் விமர்சனம் இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் சேத்தன் சர்மா உள்ளிட்ட மொத்த தேர்வுக்குழுவும் கலைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. பிசிசிஐயின் இந்த முடிவை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி மகிழ்ச்ந்தனர்.

இந்நிலையில் விரைவில் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மாவே மீண்டும் தலைவராக செயல்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இந்திய வீரர் ரிஷப் பான்ட்டுக்கு தசைநார் அறுவை சிகிச்சை!