செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (10:03 IST)

2022 –ல் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய 7 கேப்டன்கள்!

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு நிலையில்லாத பல கேப்டன்களால் வழிநடத்தப்பட்டது.

2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இரு தரப்பு தொடர்களில் பெரும்பாலானவற்றை வென்றது. ஆனால் ஐசிசி கோப்பைகளான டி 20 உலகக்கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது. அதுபோல ஆசியக் கோப்பை தொடரிலும் தோற்றது.

இந்த ஆண்டு இந்திய அணியை 7 கேப்டன்கள் வழிநடத்தியுள்ளனர். பல தொடர்களில் பல்வேறு வீரர்களான விராட் கோலி, கே எல் ராகுல், ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஜாஸ்ப்ரீத் பூம்ரா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் வழிநடத்தியுள்ளனர்.

சமீபகால ஆண்டுகளில் இத்தனை அதிக எண்ணிக்கையில் கேப்டன்கள்  வழிநடத்திய ஆண்டாக 2022 ஆம் ஆண்டு அமைந்துள்ளது.