நேற்று நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிய நிலையில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த போட்டியில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நாங்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளோம் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்....