வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 3 நவம்பர் 2023 (07:13 IST)

டெங்குவால் 6 கிலோ வரை எடையிழந்தேன்… உடல்நிலை குறித்து பேசிய ஷுப்மன் கில்!

உலகக் கோப்பையின் இந்தியாவின் முதல்  இரண்டு போட்டிகளிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை. பின்னர் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவர் களமிறங்கினார். ஆனாலும் அவர் ஆட்டம் முன்பைப் போல சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

இந்நிலையில் நேற்று இலங்கைக்கு எதிராக நடந்த நேற்றைய போட்டியில் சுப்மன் கில் 92 பந்துகளில் 92 ரன்கள் அடித்து மதுசங்கா பந்தில் அவுட் ஆனார். இதனால் நூலிழையில் சுப்மன் கில் சதத்தை தவறவிட்டதை அடுத்து ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய கில் “டெங்கு காய்ச்சலால் நான் ஆறு கிலோ உடல் எடையை இழந்தேன். இப்போது 2 கிலோ வரை ஏறியுள்ளேன். நான் இன்னும் முழுவதுமாக குணமடையவில்லை. கடந்த சில போட்டிகளில் நான் நன்றாக தொடங்கினாலும், என்னால் பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.