1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (07:57 IST)

ஐசிசி தரவரிசையில் உச்சத்துக்கு சென்ற பும்ரா.. நூலிழையில் பின்தங்கிய அஸ்வின்!

இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த போட்டி மழை காரணமாக இரண்டரை நாட்கள் பாதிக்கப்பட்டது. மீதமிருந்த இரண்டரை நாட்களில் ஒரு செஷன் மீதமிருக்கும்போதே இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு மிகமுக்கியமான காரணம் இந்திய பவுலர்களின் துல்லியமான தாக்குதல். அதிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த தொடரில் மிகச்சிறப்பாக பந்துவீசினார். இதன் மூலம் அவர் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அவர் 870 புள்ளிகளோடு முதலிடத்தில் இருக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் அவரோடு ஒரு புள்ளி குறைவாகப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் மற்றொரு இந்திய வீரரான ரவீந்தர ஜடேஜா ஆறாவது இடத்திலும் உள்ளார்.