வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 2 அக்டோபர் 2024 (08:34 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த அஸ்வின்!

தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 525 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின்.

இவர் சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட அழைக்கப்படுவதில்லை. ஆனால் இளம் வீரர்களுக்கு தன்னுடைய யுடியூப் சேனலின் மூலமாக பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதுபோல பல மூத்த வீரர்களை நேர்காணல் செய்து அவர்களது அனுபவங்களை வெளிக்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் நடந்து வரும் டெஸ்ட் தொடர்களின் போதும், அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றில் கலக்கி வருகிறார். நேற்று நடந்து முடிந்த வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவர் தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர்நாயகன் விருது பெற்ற இலங்கை பவுலர் முத்தையா முரளிதரனின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இருவரும் தலா 11 முறை தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளனர்.