வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2024 (09:23 IST)

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதையடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அணி, இந்தியாவில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது இதுவே முதல்முறை.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்து வரும் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் சேர்த்த போது மழைக் குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயேக் கைவிடப்பட்டுள்ளது.

அதையடுத்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.