திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2023 (10:44 IST)

யார் சிறந்த டி 20 ப்ளேயர்… காருக்குள் சண்டை போட்ட பிராவோ & பொல்லார்ட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் விளையாடியவர் ஆலரவுண்டர் டுவெய்ன் பிராவோ. ஆனால் வயது முதிர்ச்சி காரணமாக இந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்று அந்த அணியோடு பயனித்து வருகிறார்.

அதே போல மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2010 ஆம் ஆண்டு அறிமுகமான கைரன் பொல்லார்ட் அந்த அணியின் தூண்களில் ஒருவராக இருந்துவந்தார். ஆனால் அவரும் சமீபத்தில் ஓய்வு பெற்று அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இரு அணிகளும் ஐபிஎல் கிரிக்கெட்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் இப்போது இருவரும் இரண்டு அணிகளில் சிறந்தது எந்த அணி? இருவரில் யார் சிறந்த டி 20 வீரர் என்ற விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜாலியாக அவர்கள் பேசிக்கொள்ளும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பிராவோ பகிர, அது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.