சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரபல வீரர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பிரபல வீரர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய பொல்லார்டு ஐபிஎல் களத்தில் இருந்து விடைபெற்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கும் 10 அணிகளும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று கூறப்பட்டது
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபல வீரர் பிராவோ விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ விளையாடினார் என்பதும் கேப்டன் தோனியின் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம் கர்ரன் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Mahendran