புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 ஜனவரி 2021 (11:34 IST)

வீரர்கள் காயம்… நான் விளையாடத் தயார் - சேவாக் குசும்பு!

இந்திய வீரர்கள் தொடர்ந்து காயமாகி விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளதால் நான் வேண்டுமானால் விளையாட தயார் என சேவாக் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரெலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதில் இந்திய வீரர்கள் கே எல் ராகுல், பூம்ரா, விஹாரி மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாட முடியாத சூழலில் உள்ளனர்.

இதுகுறித்து டிவிட்டரில் பேசியுள்ள சேவாக் ‘இத்தனை வீரர்கள் காயத்தால் விலகியுள்ளதால், 11 வீரர்களை தேர்வு செய்வதில் சிக்கல் இருந்தால் நான் வேண்டுமானால் விளையாட தயாராக உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.