தூத்துக்குடி புதுமணத் தம்பதி கொலை : பெண்ணின் தந்தை கைது
தூத்துக்குடியில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த ஜோடியை வீடு புகுந்து மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாரிச்செல்வம் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் மாரிச்செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதால் கார்த்திகாவின் பெற்றோர் இந்த திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் திடீரென ஐந்து பேர் மாரிச்செல்வம், கார்த்திகா ஆகிய இருவரையும் வெட்டிக் கொலை செய்ததாக நேற்று தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கார்த்திகாவின் உறவினர்கள் மூன்று பேர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படை வேட்டையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva