வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (21:25 IST)

ராமதாஸ் பயோபிக் படத்தில் சரத்குமாருக்கு பதிலாக இவரா?

ramadoss
பாமக நிறுவனரும் மருத்துவருமான ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குனர் சேரன் இயக்கவுள்ளார்.
 
இப்படத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க  ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். 
 
இதுகுறித்து வெளியான தகவலின்படி வரவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு,சமத்துவ மக்கள் கட்சி பிரசாரம்  செய்யவுள்ளதால் இதைக் கருத்தில் கொண்டு இப்படத்தில் இருந்து அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.
 
இதையடுத்த்து, இயக்குனர் சேரன், நடிகர் பிரகாஷ்ராஜை அணுகி இதுபற்றி பேசியுள்ளார். 
இதற்கு பிரகாஷ் உடனே  ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் இப்படத்தின் ஷூடிட்ங் தொடங்கும் என கூறப்படுகிறது.
 
தேசிய விருது பெற்ற பிரகாஷ்ராஜ் மருத்துவர் ராமதாஸின் பயோபிக்கில் நடிக்க உள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.