திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:10 IST)

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்க்கும் தமிழக அரசியல்வாதியின் மனைவி..!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீண்டும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து தமிழக அரசியல்வாதியின் மனைவி போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு வயநாடு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜா போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இவர் சிபிஐ கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான டி ராஜாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய  இரண்டு கட்சிகளும் இருக்கும் நிலையில் கேரளாவில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் வேட்பாளரை போட்டியிடுகிறார்

அதுமட்டுமின்றி அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் மனைவி என்பது இந்தியா கூட்டணி மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் ராகுல் காந்தியை எதிர்த்து ஆனி ராஜா தான் போட்டியிட்டார் என்பதும் ராகுல் காந்தி இந்த தொகுதியில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் இந்த முறை ஆனி ராஜாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva