தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!
கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் முக்கியமான போட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே தனது இறுதி ஓவரில் இருந்தபோது 6 பந்துகளில் 17 ரன்கள் அடித்தால் ப்ளே ஆப் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்று இருந்தது.
அப்போது யஷ் தயால் பந்து வீச முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி இரண்டாவது பந்தில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியாமல் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இந்த ஒரே போட்டியில் கவனிக்கப்படும் வீரராக ஆனார்.
இந்நிலையில் அவர் இப்போது தோனியின் விக்கெட் எடுத்த தருணத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “தோனியின் விக்கெட்டை எடுத்தது எனக்கு வருத்தமாக இருந்தது. திரும்பவும் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா? அவர் விளையாடுவதைப் பார்க்க முடியுமா என்றெல்லாம் என மனதில் ஓடிக்கொண்டிருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.