வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (10:21 IST)

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

இந்திய கிரிக்கெட் உருவாக்கிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் வரிசையில் எப்போதும் தோனி முதல் ஆளாக வருவார். அவர் தலைமையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டி டி 20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆகியவற்றை வென்றது. ஐசிசி நடத்தும் மூன்று விதமான தொடர்களிலும் கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தோனி.

சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 14 இதே நாளில்தான் தோனி 17 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணிக்குக் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டி நடந்தது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அதற்கு முன்னர் தோனி, எந்தவிதமான உள்ளூர் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டதில்லை என்பதுதான்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி தோனி தலைமையில் விளையாடியது. அந்த போட்டியில் இரு அணிகளும் சமமாக ரன்கள் சேர்க்க, பவுல்ட் அவுட் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது. சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் பவுல்ட் அவுட் முறையில் வெற்றி பெற்ற ஒரே அணி இந்தியாதான். அதன் பிறகு போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் என்ற விதிக் கொண்டுவரப்பட்டது.