1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (07:56 IST)

இன்று இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட்: விராத் கோஹ்லிக்கு 100வது டெஸ்ட்!

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 டி20 தொடர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மூன்றையும் வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. மொகாலியில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தீவிர பயிற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மேலும் இந்த போட்டியில் விளையாடும் முன்னாள் கேப்டன் விராத் கோலிக்கு இது நூறாவது போட்டி என்பதை அடுத்து முன்னாள் வீரர்களும் தற்போதைய வீரர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
டி20 தொடரை வென்ற இந்தியா டெஸ்ட் தொடரையும் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பிக்கவுள்ள நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி மார்ச் 12ம் தேதி பெங்களூரிலும் பெங்களூரில் நடைபெற உள்ளது