தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தான் ஆதரவு கோஷம்! ‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லணும்! - நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை!
- மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கான அரையிறுதிக் கதவை பாகிஸ்தான் திறக்குமா? இன்று முக்கிய ஆட்டம்
- கோலி சொதப்பிய போது இந்தியா ஆதரித்தது… ஆனால் பாபருக்கு…? –பாகிஸ்தான் வீரர் கவலை!
- ஆடும் லெவனில் இருந்து பாபர் அசாம் நீக்கமா?... பாகிஸ்தான் கோலிக்கெ இந்த நிலைமையா?
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்ற முன்னாள் நடுவர்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பாபர் அசாம் நீக்கம்…! அடுத்தடுத்து அதிர்ச்சி வைத்தியம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை.
இதற்கெல்லாம் காரணம் அணிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அணிக்கு தற்காலிகமாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கேரி கிரிஸ்டன் கூட இதைப் பற்றி புலம்பியிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து சொதப்பி வந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார்.
இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் அவர் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மட்டுமில்லாமல் மூத்த வீரர்களான ஷாகீன் அப்ரிடி மற்றும் நஸீம் ஷா ஆகியோரும் இவ்வாறு நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.