1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Axar patel unbelievable dive made Indian turning point

திருப்புமுனையாக அமைந்த அந்த டைவ்… ரிஷப் பண்ட் செய்த தவறை சரி செய்த அக்ஸர் படேல்!

ரோஹித் ஷர்மா
ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முக்கிய போட்டியில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 205 ரன்கள் இலக்காக சேர்த்தது.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அந்த சமயத்தில் ரன் ரேட் 10 ரன்களுக்கு மேல் செல்ல ஆட்டம் அவர்கள் கையில் இருந்தது. அப்போது மிட்செல் மார்ஷ் அடித்த ஒரு பந்து ரிஷப் பண்ட்டுக்கு அருகில் கேட்ச்சாக சென்றது. ஆனால் அவர் அதை ஜம்ப் செய்து பிடிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டார். இதைப் பார்த்து கடுப்பான கேப்டன் ரோஹித் ஷர்மா ஆவேசமாகக் கத்தி கோபத்தை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து சில ஓவர்கள் கழித்து மிட்செல் மார்ஷ் தூக்கியடித்த ஷாட்டை எல்லைக் கோட்டருகே நின்ற அக்ஸர் படேல் அசாத்தியமான ஒரு டைவ் அடித்து பிடித்தார். அப்போது 8 ஓவர்களில் 87 ரன்களுக்கு ஒரு விக்கெட் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது இந்திய அணி. அந்த விக்கெட்டுக்குப் பிறகுதான் மளமளவென விக்கெட்கள் விழுந்து ஆஸி அணி நிலைகுலைய ஆரம்பித்தது. 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை