வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 22 மே 2024 (21:14 IST)

ஆவேஷ் கான் அபார பவுலிங்க்… சொதப்பிய ஆர் சி பி பேட்ஸ்மேன்கள்.. ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்த இலக்கு இதுதான்!

ஐபிஎல் 17 ஆவது சீசனில்  இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதையடுத்து பேட்டிங் ஆடவந்த ஆர் சி பி அணி ஆரம்பத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. இதனால் அந்த அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 33 ரன்களும், ரஜத் படிதார் 34 ரன்களும் சேர்த்தனர்.

கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக ஆடிய மஹிபால் லோம்ரார் 17 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆர் சி பி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எட்டிபிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்களையும், அஷ்வின் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.