வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 22 மே 2024 (18:51 IST)

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

BJP Congress
சாதி, சமூகம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்சாரம் செய்ததற்காக பாஜக மற்றும் காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
தேர்தல் நடத்தை விதிகளை மீறி மதரீதியாக வெறுப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆளும் கட்சியின் தேர்தல் நடத்தை விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை என்றும் புகார் தெரிவித்தன.
 
இந்நிலையில் பிரதமர் மோடி - ராகுல்காந்தி ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபட்டதாக பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதில், இருதரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பி தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது.  சாதி, சமூகம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்சாரம் செய்ததற்காக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்த தேர்தல் ஆணையம், தேர்தல் நேரத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்று பாஜவுக்கு குட்டு வைத்துள்ளது. 

 
எதிர்க்கட்சிகள் வரம்பற்ற வகையில் செயல்படவும் கூடாது என தேர்தல் ஆணையம் காங்கிரஸையும் சாடியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் நடத்தைக்கு முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மத்தியில் ஆளுகின்ற கட்சி, சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சார உரைகளை நிறுத்துமாறும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.