வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 22 மே 2024 (21:12 IST)

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

America
இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் 305 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பிரபல அமெரிக்க அரசியல்  இயான் ஆர்தர் பிரிம்மர் கணித்துள்ளார்.
 
அமெரிக்காவை சேர்ந்த பிரபல அரசியல் ஆலோசகர் இயான் ஆர்தர் பிரிம்மர், யூரேஷியா குரூப் குழும நிறுவன தலைவராக உள்ளார். ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட நாடு என்றார். ஜப்பான் இந்தியாவுடன் வலுவான நட்புறவு வைத்துள்ளது என்றும் உலக நாடுகள் இந்தியாவை நெருங்கி வருகின்றன என்றும் அவர் கூறினார்.
 
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது என்று தெரிவித்த இயான், இத்தேர்தலில் 305 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று கணித்துள்ளார்.

 
பிரதமர் மோடியின் நிலையான சீர்திருத்தத்தின் பின்னணி, வலுவான பொருளாதார செயல் திறன் ஆகியவற்றால் 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று இயான் ஆர்தர் பிரிம்மர் தெரிவித்தார்.