செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:34 IST)

419 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்ட்டையும் வென்ற ஆஸ்திரேலியா… வெஸ்ட் இண்டீஸ் பரிதாபம்!

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது.

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்து டிக்ளேர் செய்தது.

அதன் பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 214 ரன்கள் மட்டும் சேர்த்து ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய ஆஸி அணி 199 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 494 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 77 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் ஆஸி அணி 417 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட்டையும் ஆஸ்திரேலிய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.