வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (18:07 IST)

உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி சென்ற 5 சிங்கங்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

lion
உயிரியல் பூங்காவில் இருந்து ஐந்து சிங்கங்கள் தப்பித்து சென்று விட்டதாக கூறப்படுவதை ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த மாதம் ஐந்து சிங்கங்கள் தப்பிச் சென்று விட்டதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 
 
சிசிடிவியில் பதிவான காட்சிகளின் மூலம் தற்போது சிங்கங்கள் தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
 
ஒரு வயதான ஆண் சிங்கம் மற்றும் நான்கு குட்டி சிங்கங்களும் தடுப்பு வேலியைக் கடந்து வெளியே வரும் காட்சியை சிசிடிவியில் பார்த்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் இதனை அடுத்து அந்த உயிரியல் பூங்காவிற்கு கூடுதல் பாதுகாப்பு வேலிகளை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த சிங்கங்கள் ஊருக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva