1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (15:59 IST)

வலுவான ஸ்கோரில் டிக்ளேர் செய்த ஆஸி. அணி – வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்!

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 330 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் லபுஷான் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சதம் அடித்து அசத்தியுள்ளனர்.

இந்த போட்டியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடாத நிலையில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பால் டேம்பரிங் விவகாரத்தில் அவர் தன்னுடைய கேப்டன் பதவியை இழந்த நிலையில் இப்போது மீண்டும் முதல் முறையாக கேப்டன் பொறுப்புக்கு மீண்டும் வந்துள்ளார். 

இதையடுத்து இரண்டாம் நாளில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 511 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் தொடர்ந்து ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்களை இழந்து 50 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறது.