திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (12:44 IST)

ஆஸ்திரேலியாவில் கோலி மற்றும் டெண்டுல்கர் பெயரில் தெருக்கள்!

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்டன் எனும் நகரில் கிரிக்கெட் வீரர்கள் பெயரில் தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்தான். அதற்கேற்றார்போல அந்த அணி பல வருடங்களாக உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே போல அந்த நாட்டில் கிரிக்கெட் வீரர்களுக்கு என்று தனி மரியாதையும் உண்டு. இந்நிலையில் அந்நாட்டில் உள்ள விக்டோரியா மாகணத்தில் டெண்டுல்கர் டிரைவ், கோலி கிரெஸ்ண்ட் எனத் தெருக்களுக்கு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு ரியல் எஸ்டேட் காரர்கள் புதிதாக உருவாக்கும் நகருக்கு இந்த பெயரை வைத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது காலிஸ் விலா, தேவ் டெரசஸ், (வாசிம்) அக்ரம் வே, ஸ்டீவ் வாக் என உலக நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்களையும் வைத்துள்ளனர்.