1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (06:28 IST)

10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை: இந்தியா கொரோனா நிலவரம்

10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 333,008 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 11,382 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா காரணமாக 321 பேர் பலியாகியுள்ளதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் இந்தியாவில் இதுவரை 1,69,689 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர் என்பது மட்டுமே ஒரு ஆறுதலான செய்தியாகும். மேலும் இந்தியாவில் தற்போது 1,53,760 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,82,948ஆக இருக்கும் நிலையில் இந்தியா, உலக கொரோனா வரிசைப்பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 21,62,144 பேர்களுக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 867,882 பேர்களுக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள ரஷ்யாவில் 528,964 பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது