திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 21 அக்டோபர் 2023 (07:22 IST)

பாகிஸ்தானை வென்று புள்ளிப் பட்டியலில் முன்னேறிய ஆஸ்திரேலியா!

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும்  மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

இதையடுத்து 368 ரன்கள் என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும், பின்னால் வந்த வீரர்கள் அதை தொடர்ந்து எடுத்து செல்லவில்லை. இதனால் 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 305 ரன்கள் மட்டுமே சேர்த்தது பாகிஸ்தான்.

இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளோடு ஆஸ்திரேலிய அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.