வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (11:22 IST)

விக்கெட் கீப்பருக்கு பஞ்சம்.. இந்திய அணிக்கு திரும்புகிறாரா ‘தல’ தோனி?! – ரவி சாஸ்திரி தகவல்!

Dhoni Kohli
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் தோனி விக்கெட் கீப்பராக இணைகிறாரா என்பது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மகேந்திரசிங் தோனி. இந்தியா முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்ட மகேந்திரசிங் தோனி அனைத்து ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகிய நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் வலுவான விக்கெட் கீப்பர் இல்லையென்பதால் தோனியை மீண்டும் அணியில் இணைய கேட்டு வருவதாக பேசிக்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “தோனி ஒருமுறை முடிவெடுத்து விட்டால் முடிவை மாற்றவே மாட்டார். அவர் நினைத்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில ஆண்டுகள் விளையாடி 100 டெஸ்ட் போட்டிகளை முடித்து ரசிகர்கள் கூட்டம், கொண்டாட்டத்தோடு விடை பெற்றிருக்கலாம். ஆனால் அவர் அதை விரும்பாமல் புதிய மனிதராக இருக்கிறார். அவர் அப்படியே இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K