வெளியானது புதிய டெஸ்ட் ஐசிசி தரவரிசை… யார் யாருக்கு எந்த இடம்?
ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசையை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி அணிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
பேட்ஸ்மேன்கள் வரிசையில் சமீபத்தில் ஆஷஸில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த மார்னஸ் லபுஷான் மூன்றாம் இடத்துக்கு செல்ல, இந்திய வீரர் ரிஷ்ப் பண்ட் 10 ஆவது இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் அவர் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் அஸ்வின் முதல் இடத்தை மீண்டும் தக்கவைத்துள்ளார். அதே போல ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.