வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 12 நவம்பர் 2022 (21:25 IST)

ஐசிசி-ன் நிதிச்செயலாளர் பதவிக்கு அமித்ஷாவின் மகன் நியமனம்!

jay sha
சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசியின் நிதிக்குழு தலைவராக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசியின் தலைவராக நியூசிலாந்தின் கிரெக் பார்க்லே  ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், இந்திய கிரிக்கெட் போர்டின் செயலாளராகப் பதவி வகித்து வரும்  மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு ஐசிசியின் அதிகாரமிக்க பதவியாக, நிதிச்செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஏற்கனவே, கடந்த 2015 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை போட்டியின் போது இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசியின் புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது

Edited by Sinoj