செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 29 அக்டோபர் 2022 (16:05 IST)

நியுசிலாந்து பவுலிங்கில் பெட்டிப் பாம்பாய் அடங்கிய இலங்கை பவுலர்கள்!

நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் நியுசிலாந்து அணியின் கை ஓங்கியுள்ளது.

இன்று சூப்பர் 12 லீக்கில் நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி நடந்து வருகின்றது. இதில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் க்ளென் பிலிப்ஸ் அபாரமாக விளையாடி 104 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி தற்போது வரை 5 விக்கெட்களை இழந்து 25 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. நியுசிலாந்து அணியின் ட்ரண்ட் போல்ட் 3 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார்.