திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:44 IST)

அல்லு அர்ஜுன் கூட ரீல்ஸ்; ஹைதராபாத் பிரியாணி மீல்ஸ்! – டேவிட் வார்னரின் ஆசை இதுதான்!

Warner
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தனது ஆசைகள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.



ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ், டெல்லி அணிகளுக்கு விளையாடியுள்ள வார்னருக்கு இந்தியாவிலும் பல ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் தாண்டி அவர் செய்யும் இன்ஸ்டா ரீல்களுக்கும் ரசிகர்கள் ஏராளம்.

பிரபலமான தென்னிந்திய இசை பாடல்களுக்கு அவர் ரீல்ஸ் செய்து உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வார்னரிடம் பிடித்தமான விஷயங்கள் கேட்கப்பட்டது.

அந்த பேட்டில் “எந்த நடிகரோடு சேர்ந்து ரீல்ஸ் செய்ய விரும்புவீர்கள்?” என்ற கேள்விக்கு தான் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனோடு சேர்ந்து ரீல்ஸ் செய்ய விரும்புவதாக வார்னர் கூறியுள்ளார். அல்லு அர்ஜுனின் ‘புட்டபொம்மா’ பாடலுக்கு ரீல்ஸ் செய்து வார்னர் ஏராளமான இந்திய ரசிகர்கள் மனதில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதுபோல தன் விருப்பமான உணவு எது என்ற கேள்விக்கு ஹைதரபாத் பிரியாணி என கூறியுள்ளார் வார்னர். முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்காக அவர் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K