தொடர்புடைய செய்திகள்
- அணியில் வீரர்களை விர சப்போர்ட்டிங் ஊழியர்கள் அதிகமாக உள்ளனர்… இந்திய அணியின் தோல்வி குறித்து கவாஸ்கர்!
- எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவீர்களா?... நிரூபரின் கேள்விக்கு பாகிஸ்தான் கேப்டனின் பதில்!
- பாபர் அசாம் உலகக்கோப்பையை வென்றால் பாகிஸ்தான் பிரதமர் ஆவார்… கவாஸ்கரின் ஜாலி கமெண்ட்ரி!
- என்னைக் கொல்ல சதி நடக்கிறது - முன்னாள் அதிபர் இம்ரான் கான்
- மீண்டும் வலிமையாகப் போராடுவேன்- முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
அடுத்த ஆண்டு இந்தியாவில் யார் என்று காட்டுங்கள்… பாகிஸ்தான் அணிக்கு அக்தர் ஆதரவு!
பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் சிறப்பாக விளையாடியதாக சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது, அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சூப்பர் 12 லீக் சுற்றில் முதலில் மோசமாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவின் புண்ணியத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதன் பின்னர் அரையிறுதி போட்டியில் நியுசிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. ஆனால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது.
இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் “இந்த தொடரிலேயே சிறப்பாக விளையாடிய அணி நாம்தாம். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையை வென்று நீங்கள் யார் என்று நிரூபியுங்கள்” என ஆதரவாக பேசியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்