திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 நவம்பர் 2022 (12:13 IST)

உலகக்கோப்பை கால்பந்து; நேரலையில் பார்ப்பது எப்படி?

Fifa 2022
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில் நேரலையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறுகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 18ம் தேதி வரை 29 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 32 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றனர். கத்தாரில் உள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

இன்று தொடக்க போட்டியில் கத்தார் – ஈகுவடார் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. அதற்கு முன்னதாக நடைபெறும் தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரபல பாடகிகள் துவா லிபா, ஷகீரா ஆகியோர் மறுத்துவிட்ட நிலையில் பிரபல பிடிஎஸ் குழுவினர் நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போட்டியை இந்தியாவில் Sports 18, Sports 18 HD உள்ளிட்ட தொலைக்காட்சி சேனல்களில் காணலாம். மொபைல் பயனாளர்கள் ஜியோசினிமா செயலியில் நேரடி ஒளிபரப்பை காணலாம். இதுதவிர Jio Cinema இணையதள பகுதியிலும் இலவசமாக நேரலையை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K