1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 நவம்பர் 2022 (15:32 IST)

88 ரன்களில் 4 விக்கெட் இழந்த நியூசிலாந்து: இந்திய பவுலர்கள் அசத்தல்!

newzeland wickets
88 ரன்களில் 4 விக்கெட் இழந்த நியூசிலாந்து: இந்திய பவுலர்கள் அசத்தல்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
குறிப்பாக சூர்யகுமார் யாதவ் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 192 என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது
 
அந்த அணி முதல் ஓவரிலேயே ஓபனிங் பேட்ஸ்மேன் அலென் விக்கெட்டை இழந்த நிலையில் தற்போது 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 7 ஓவர்களில் அதாவது 42 பந்துகளில் 104 அந்த அணி எடுக்கவேண்டிய நிலை இருப்பதால் இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆன தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சாஹல் மற்றும் புவனேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்.
 
Edited by Siva