செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (08:59 IST)

காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்களும் கட்சி மாறினர்; மேகாலயாவில் பரபரப்பு!

மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமே 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் அந்த 12 எம்எல்ஏக்களும் கட்சி மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்களும் கட்சி மாறினர்; மேகாலயாவில் பரபரப்பு!
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மேகாலய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களை பிடித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 12 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்
 
இதனால் காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 5 எம்எல்ஏக்களும் இன்று பாஜகவில் இணைந்து உள்ளதால் தற்போது மேகலாயாவில் உள்ள அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இது குறித்து சோனியா காந்தியிடம் தகவல் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.