செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (09:01 IST)

திமுக வெற்றிபெற வாபஸ் வாங்கிய அதிமுகவினர் – கட்சியிலிருந்து நீக்கம்!

திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற ஏதுவாக மனுவை வாபஸ் பெற்ற அதிமுக வேட்பாளர்களை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம் சில பகுதிகளில் வேட்பாளர்கள் தங்களுக்குள் பேசி ஒருவரை தவிர்த்து மற்றவர்கள் மனுவை வாபஸ் வாங்கி கொள்ளும் சம்பவங்களும் நடந்தன. திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் சிலர் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் இவ்வாறாக மனுவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்த அதிமுக தலைமை அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.