தொடர்புடைய செய்திகள்
- தோனியின் பண்ணை வீட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!
- ஏன் 7 ஆம் எண் ஜெர்ஸி… தோனி பகிர்ந்த ரகசியம்!
- நம்பர் ஒன் அவர்தான், நானில்லை: ரசிகரின் கேள்விக்கு தோனி பதில்!
- அஜித் 62 படத்தை இயக்குகிறாரா விக்னேஷ் சிவன்? பரபரப்பை ஏற்படுத்திய அப்டேட்!
- இதில் அப்படி என்ன இருக்கிறது… 45000 ரூபாயாம்! பிரபலங்கள் விரும்பி அணியும் டி ஷர்ட்!
தோனிக்கு அப்றம் சி எஸ் கே கேப்டன் யார்? முன்னாள் வீரரின் கணிப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தற்போது 40 வயதில் சி எஸ் கே அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் சி எஸ் கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது 40 வயதாகும் அவர் இந்த ஆண்டு சி எஸ் கே அணியை தலைமையேற்று விளையாடுகிறார்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் ஐபிஎல் விளையாடுவார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த ஆண்டோடு ஓய்வை அறிவித்தாலும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்குப் பிறகு சி எஸ்கே அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு ரவிந்தர ஜடேஜாவுக்கு அதிகமாக இருப்பதாக முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். மேலும் மொயின் அலியும் அணியை தலைமையேற்று வழிநடத்தி செல்லும் திறமை கொண்டவர் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்