வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (12:03 IST)

தோனியின் பண்ணை வீட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!

தோனியின் பண்ணை வீட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் பண்ணை வீட்டை மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்க்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
 
சிஎஸ்கே கேப்டன் தோனி தற்போது சூரத் நகரில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் உள்ளார். இந்த நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தன்னுடைய பண்ணை வீட்டை மார்ச் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் பார்க்கலாம் என அனுமதி அளித்துள்ளார் 
 
மேலும் அந்த பண்ணை வீட்டில் விளையும் காய்கறிகள் பழங்களையும் பொதுமக்கள் வாங்கி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டை பார்ப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது