1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (11:57 IST)

நம்பர் ஒன் அவர்தான், நானில்லை: ரசிகரின் கேள்விக்கு தோனி பதில்!

நம்பர் ஒன் அவர் தான் நான் இல்லை என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தல தோனி பதில் அளித்துள்ளார்.
 
 கிரிக்கெட் போட்டி என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது தோனி தான் என்பதும் அவர்தான் நம்பர் ஒன் கேப்டனாகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அனைவருக்கும் தெரியும் களத்தில் நீங்கள் தான் நம்பர் 1 என்று, ஆனால் வீட்டில் எப்படி? என்று கேட்டுள்ளார் 
 
அதற்கு தோனி அனைவருக்கும் தெரியும் வீட்டில் மனைவி தான் நம்பர் 1 என்று அவர் பதிலளித்துள்ளார். தோனியிடம் ரசிகர் கேட்ட கேள்விக்கு அவரது ஸ்டைலில் பதிலளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.