வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (07:48 IST)

மும்முர்த்திகளுக்கு மட்டுமே சலுகை… மற்றவர்களிடம் கண்டிப்புக் காட்டும் பிசிசிஐ!

டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. அடுத்து நடக்கவுள்ள இலங்கை தொடரில் இந்திய அணியோடு இணைய உள்ளார். இந்நிலையில் அவர் வீரர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் “ஒரு குழு விளையாட்டு என்பது தனிப்பட்ட சாதனைகளுக்கானது அல்ல. நான் பேட்டை எடுத்தால் போட்டியின் முடிவைப் பற்றி எண்ண மாட்டேன். எனது ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துவேன்.

வீரர்கள் மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடினால் காயம் அடைவார்கள். அதனால் சில வீரர்களுக்கு மட்டும் ஓய்வளித்து சலுகை அளிப்பது என்பது தவறான அணுகுமுறையாகும். அதனால் வீரர்கள் காயத்தில் இருந்து வெளியே வரவேண்டும்.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது பிசிசிஐ தனிப்பட்ட முறையில் அனைத்து வீரர்களிடமும் ‘அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட எப்போதும் தயாராக இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளதாம். இதிலிருந்து மூத்த வீரர்களான கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு மட்டும் சலுகை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.