2019 ஐபிஎல் போட்டிகளை முன்கூட்டியே நடத்த திட்டம்!

Last Updated: வெள்ளி, 1 ஜூன் 2018 (17:29 IST)
இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்கி, மே 27 ஆம் தேதி வரை நடைபெற்றது.
 
2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி முன்கூட்டியே நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடருக்கு சிக்கல் ஏற்படக்கூடும். 
 
அத்துடன் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. ஐசிசி விதிமுறைப்படி உலகக் கோப்பை நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அணிகள் தயாராகிவிட வேண்டும். 
 
2009 மற்றும் 2014 ஐபிஎல் சீசனின் போது, தேர்தலால் சிக்கல் ஏற்பட்டு தென் ஆப்பிரிக்காவிலும், ஐக்கியர அரபு எமிரேட்ஸிலும் போட்டிகள் நடைபெற்றது. எனவே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க மார்ச் மாதமே ஐபிஎல் துவங்கும் என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :