செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணம் என்ன...?

கர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும். 

சிலருக்கு தாயின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, கருச்சிதைவு, பிறவி ஊனம், குறைப் பிரசவம், நிறைமாத சிசு இறப்பு, அதிக எடையுள்ள குழந்தை பிறப்பு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி மற்றுமொரு நேரடியான பாதிப்பையும் கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த  கர்ப்பகால சர்க்கரைநோய் ஏற்படுத்துகிறது.
 
கர்ப்பகால சர்க்கரை நோய் வருவதற்கு வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கியக் காரணியாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். குழந்தை  பிறந்த பிறகு இந்தப் பிரச்சனை சரியாகி விடும் என்றாலும் கருவுற்ற காலத்தில் கவனமாக இருந் தால் தாய் சேய் இருவரது ஆரோக்கியம் காக்கப்படும்.
 
சாதாரணமாக சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து இரத்தத்தில் சர்க்கரை அளவானது 160 மி.கிராம் அளவில் இருக்க வேண்டும். அதைத் தாண்டினால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம்.
 
சர்க்கரை நோய் இல்லாத பெண்களுக்கும் கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் உண்டாகலாம். கர்ப்பக்காலத் தில் புரொஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன், ஹியூமன் பிளேசென்டால் லாக்டோஜன் போன்றவை அதிகம் சுரக்கும். இந்த ஹார்மோன்கள் இன்சுலினுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை கொண்டவை என்பதால் அதை  ஈடுசெய்ய ஆரோக்கியமான உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்.
 
ஆனால் ஆரோக்கியம் குறைந்த பெண்கள், இனிப்பு செயற்கை குளிர்பானங்களை அதிகம் உண்ணும் கர்ப்பி ணிகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இன்சுலின் அளவு குறையும் போது சர்க்கரை நோய் உண்டாகிறது.