திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (13:44 IST)

ஒவ்வொரு விக்கெட்டா போகுதே என்ன காரணம்? – திமுக ஆலோசனை கூட்டம்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ பாஜகவில் இணைய உள்ள சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது.

சமீப காலமாக திமுக முக்கியஸ்தர்கள் பலர் பாஜகவில் இணைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இன்று மாலை பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கு.க. செல்வம் விரும்பி கேட்ட பதவி தரப்படாத விரக்தியில் அவர் கட்சியை விட்டு விலகுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

ஆனால் அதேசமயம் கு.க.செல்வம் ஆதரவாளர்கள் தரப்பில் திமுகவில் குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து பெரிய அளவிலான பதவிகளை தக்கவைத்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்.எஸ்.பாரதி, துரைமுருகன் உள்ளிட்டோர் பங்குபெற்றுள்ள அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுகவினர் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறும் செயல்களுக்கு தீர்வு காண இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் திமுக தனது தொண்டர்களுக்கு, நிர்வாகிகளுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.